Editorial / 2026 ஜனவரி 02 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில், பிரதமர் சனே டக்காயிச்சி உட்பட சுமார் 60 பெண் எம்.பி.க்கள், பாராளுமன்றத்தில் அதிக பெண்கள் இருந்தும் இரு டாய்லெட்டை பயன்படுத்த வரிசையில் காத்திருக்கும் நிலை இருப்பதால் கூடுதல் கழிப்பறைகள் கேட்டு போராட்டம் நடத்தினர்.
டயட் சபையின் முக்கிய கூட்ட அரங்கிற்கு அருகே, கீழ்சபையின் 73 பெண் உறுப்பினர்களுக்கு இரு அறைகள் கொண்ட ஒரேயொரு கழிப்பறை மட்டுமே உள்ளது. இது ஆண்களின் ஆதிக்கம், அதிகரித்த பெண் பிரதிநிதித்துவத்திலும் ஏற்றத்தாழ்வை காட்டுகிறது.
கீழ்சபையின் 465 உறுப்பினர்களில் 72 பேர் பெண்கள் (முந்தைய பாராளுமன்றத்தில் 45 பேர்). மேல்சபையின் 248 உறுப்பினர்களில் 74 பேர் பெண்கள். சட்டப்பேரவை இருக்கைகளில் குறைந்தது 30% இடங்களை பெண்கள் வகிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இலக்காகும்.
மார்கரெட் தாட்சரின் ரசிகையான டக்காயிச்சி, பிரதமராவதற்கு முன்பு "நோர்டிக் நாடுகளின் பாலின சமநிலை"யை விரும்பினார். ஆனால், தனது 19 பேர் கொண்ட அமைச்சரவையில் இரண்டு பெண்களை மட்டுமே நியமித்தார். 64 வயதான டக்காயிச்சி, பெண்களின் உடல்நலப் பிரச்சினைகள், மாதவிடாய் நிறுத்தம் (மெனோபாஸ்) குறித்த தனது அனுபவம் பற்றியும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இருப்பினும், டக்காயிச்சி சமூக ரீதியாகப் பழமைவாதி. திருமணமான தம்பதிகள் ஒரே குடும்பப் பெயரைப் பயன்படுத்தும் 19 ஆம் நூற்றாண்டுச் சட்டத்தைத் திருத்துவதை எதிர்க்கிறார். பேரரசர் குடும்பம் ஆண் வழி வாரிசுரிமையைத் தக்கவைக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்.
கோமியாமியாவின் கூற்றுப்படி, பெண் கழிப்பறைகளுக்கான இக்கோரிக்கை ஜப்பானில் முன்னேற்றத்தின் அடையாளம். ஆனால், பாலின சமத்துவத்தை அடைய நாடு தவறிவிட்டது என்பதையும் இது சுட்டிக் காட்டுகிறது. "பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதற்கான குறியீடு இது", என்றார் அவர். மற்ற துறைகளிலும் சமத்துவம் வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
க்டோபரில் சனே டக்காயிச்சி முதல் பெண் பிரதமரானார்.
எதிர்க்கட்சியின் யாசுகோ கோமியாமியா, "கூட்டத்தொடர்களுக்கு முன், பெண் உறுப்பினர்கள் கழிப்பறைக்காக நீண்ட வரிசையில் நிற்க நேரிடுகிறது" என்றார். இம்மாதத் தொடக்கத்தில், 58 பெண் உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை, கீழ்சபை விதிகள் மற்றும் நிர்வாகக் குழுத் தலைவர் யாசுகசு ஹமாடாவிடம் அளித்தார்.
யோமியூரி ஷிம்புன் படி, கீழ்சபையில் ஆண்களுக்கு 67 அறைகளுடன் 12 கழிப்பறைகளும், பெண்களுக்கு 22 அறைகளுடன் ஒன்பது வசதிகளுமே உள்ளன. பெண்கள் வாக்குரிமை பெறுவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்பே, 1936-ல் டயட் கட்டடம் கட்டப்பட்டது.
உலகப் பொருளாதார மன்றத்தின் பாலின இடைவெளி அறிக்கையில், 148 நாடுகளில் ஜப்பான் 118வது இடத்தில் உள்ளது. வணிகம், ஊடகங்களிலும் குறைவான பெண் பிரதிநிதித்துவமே காணப்படுகிறது. தேர்தல்களில், பெண் வேட்பாளர்கள் குழந்தைகளைக் கவனிக்க வீட்டிலிருக்கும்படி கூறும் பாகுபாட்டுப் பேச்சுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 minute ago
27 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
45 minute ago