2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

7வது முறையாக ஜனாதிபதியாகும் யோவரி முசவேனி

Editorial   / 2026 ஜனவரி 18 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின்  ஜனாதிபதியாக செயல்பட்டு வருபவர் யோவரி முசவேனி (வயது 81) ஆகும்.

இவர் தேசிய எதிர்ப்பு இயக்கம் என்ற கட்சியின் தலைவர் ஆவார். யோவரி முசவேனி கடந்த 1986ம் ஆண்டு முதல் 40 ஆண்டுகளாக உகாண்டாவின் ஜனாதிபதியாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், உகாண்டா ஜனாதிபதித் தேர்தல் வௌ்ளிக்கிழமை (16) அன்று நடைபெற்றது. இதில், யோவரி முசவேனி மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவரான பாபி ஒயின் போட்டியிட்டார். இந்த தேர்தலில் யோவரி முசவேனி வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

யோவரி முசவேனி 71.65 சதவீத வாக்குகள் வெற்றிபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 7வது முறையாக யோவரி முசவேனி உகாண்டா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேவேளை தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் பாபி ஒயின் குற்றஞ்சாட்டி வருகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X