2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

8000 அரசு பணியிடங்களை இரத்து செய்தார் ட்ரம்ப்

Freelancer   / 2025 மார்ச் 07 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் 80,000 அரசு பணியிடங்களை ரத்து செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஜனவரி 20 ஆம் திகதி தி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட்  ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் 'அரசு செயல் திறன்' (டி.ஓ.டி.ஜி) என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் பதவி வகிக்கிறார்.

டி.ஓ.டி.ஜி. துறையின் பரிந்துரைகளின்படி அமெரிக்க அரசின் செலவினங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கான துறையில் 80,000 அரசு பணியிடங்களை இரத்து செய்ய ட்ரம்ப் அரசு முடிவு செய்துள்ளது.

இந்த துறையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வேலை இழப்பார்கள் என்று தெரிகிறது. மேலும் இந்த துறைக்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ட்ரம்பின் முடிவுகள் குறித்து ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X