2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

83 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க ட்ரம்புக்கு உத்தரவு

Freelancer   / 2024 ஜனவரி 27 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண் பத்திரிகையாளர் தொடர்ந்து அவதூறு வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 83 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பொதுவெளியில் தன்னை அவமானப்படுத்தியதாக பெண் பத்திரிக்கையாளர் ஜீன் கரோல் என்பவர் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 10 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் 83 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க ட்ரம்புக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜீன் கரோல் கேட்டதை விட 8 மடங்கு அதிகமாக நீதிமன்றம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.  

அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என டொனால்ட் டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X