2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,912ஆக அதிகரித்தது

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது நேற்று  42ஆல் அதிகரித்துள்ள நிலையில் COVID-19-ஆல் சீனாவில் தற்போது 2,912 பேர் உயிரிழந்துள்ளனர்.

COVID-19-இன் மய்யமனா ஹுபெய் மாகாணத்திலேயே 42 உயிரிழப்புகளும் நேற்று ஏற்பட்ட நிலையில், அதில் 32 பேர் ஹுபெய்யின் தலைநகர் வுஹானில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, சீனாவில் நேற்று  COVID-19-ஆல் புதிதாக 202 பேர் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இதுவரையில் 80,026 பேர் COVID-19ஆல் பீடிக்கப்பட்டுள்ளனர். நேற்று COVID-19-ஆல் பீடிக்கப்பட்ட 202 பேரில் 196 பேர் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என சீன தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது. இதில் 193 பேர் வுஹானைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், தென்கொரியாவில் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 4,335ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அதிகாரிகளை மேற்கோள்காட்டி யொன்ஹப் செய்தி முகவரகம் இன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில், COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 22ஆக அதிகரித்துள்ளதாக நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான கொரிய நிலையங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஈரானில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 54ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சின் பேச்சாளர் கியனுஷ் ஜஹன்பூர் அந்நாட்டு அரச தொலைக்காட்சிக்கு நேற்று  தெரிவித்துள்ளதுடன் COVID-19-ஆல் தொற்ற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 978ஐ எட்டியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், இத்தாலியில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 34ஆக நேற்று உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், COVID-19-ஆல் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 1,694ஆக அதிகரித்துள்ளதாக இத்தாலியின் சிவில் பாதுகாப்பு முகவரகத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X