2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

COVID -19: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,744ஆக அதிகரித்தது

Editorial   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் COVID -19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது நேற்று  29ஆல் அதிகரித்து 2,744ஆக இன்று காணப்படுகிறது. இதில், COVID -19-இன் மய்யமான ஹுபெய் மாகாணத்திலேயே 26 உயிரிழப்புகள் நிகழ்ந்ததுடன், சீனத் தலைநகர் பெய்ஜிங், ஹெய்லொங்ஜியாங், ஹெனான் ஆகிய மாகாணங்களில் தலா ஒவ்வொரு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், சீனாவில் 433 பேருக்கு புதிதாக COVID -19 தொற்று நேற்று ஏற்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ள நிலையில், சீனாவில் மொத்தமாக 78,497 பேர் COVID -19-ஆல் தற்போது பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹுபெய்யில் 409 பேருக்கு நேற்று  COVID -19 தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், ஹுபெய்க்கு வெளியே 24 பேருக்கு COVID -19 தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, தென்கொரியாவில் 505 பேர் இன்று COVID -19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக தென்கொரியாவில் தற்போது 1,766 பேர் COVID -19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளதாக நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு கொரிய நிலையங்கள் தெரிவித்துள்ளதுடன், அங்கு COVID -19-ஆல் 13ஆவது உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்கொரியாவில் இன்று புதிதாக COVID -19 தொற்றுக்குள்ளான 505 பேரில் 422 பேர், தென்கொரியாவில் COVID -19 பரவலுக்கு காரணமாய் அமைந்த தேவாலயமுள்ள தென்கிழக்கு நகரமான தயேகுவைச் சேர்ந்தவர்கள் ஆவர் என நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான கொரிய நிலையங்கள் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஈரானின் அரச ஐ.ஆர்.என்.ஏ செய்தி முகவரகத்தின் பிந்தைய தகவல்படி ஈரானில் 141 பேர் COVID -19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளதுடன் 22 உயிரிழப்புகள் COVID -19-ஆல் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், இத்தாலியில் நேற்றைய முடிவில் 100 பேருக்கு புதிதாக COVID -19 தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு 400 பேருக்கு COVID -19 தொற்று ஏற்பட்டுள்ளதுடன், அங்கு COVID -19 உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X