2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

COVID-19: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2663ஆக உயர்ந்தது

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் COVID-19-ஆல் மேலும் 71 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று சீனா தெரிவித்துள்ள நிலையில், சீனாவில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 2,663ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், COVID-19-இன் மய்யமான மத்திய மாகாணமான ஹுபெய்யில் 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஹுபெய்யின் தலைநகரான வுஹானில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, COVID-19-ஆல் புதிதாக தொற்றுக்குள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்ட 508 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ள நிலையில் COVID-19-ஆல் சீனாவில் மொத்தமாக இதுவரையில் 77,658 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், புதிதாக COVID-19 தொற்றுக்குள்ளான 508 பேரில் ஒன்பது பேரைத் தவிர ஏனைய அனைவரும் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில், வுஹான் பெண்களின் சிறைச்சாலையில் COVID-19-ஆல் பீடிக்கப்பட்ட 279 பேர் உள்ளடங்கலாக ஹுபெய் சிறைச்சாலைகளில் 323 பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, டயமன்ட் பிறின்ஸஸ் பயணிகள் கப்பலிலிருந்த நான்காவது நபர் ஜப்பானில் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தென்கொரியாவானது COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ள புதிதாக 60 பேரை இன்று அடையாளங்கண்டுள்ள நிலையில் அங்கு 893 பேர் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றுப் பிற்பகல் வரையில் அங்கு ஒன்பது உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, ஈரானில் COVID-19-ஆல் மேலும் மூன்று உயிரிழப்புகள் ஏற்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ள நிலையில் அங்கு மொத்தமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X