Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2025 மார்ச் 16 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈராக் உளவுத்துறையுடன் இணைந்து அமெரிக்கப்படை நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகளை கவனித்து வந்த முக்கியத் தலைவர் அபு காதிஜா உயிரிழந்தார்.
ஈராக்கில் தீவிரவாத தடுப்பு நடுவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க அமெரிக்க வீரர்கள் 2,500 பேர் முகாமிட்டுள்ளனர். ஈராக்கின் தொலைதூர பகுதிகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் 2-வது இடத்தில் உள்ள முக்கியத் தலைவர் அபு காதிஜா. இவர் உலகின் பல நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகளை ஈராக்கில் இருந்தபடியே கவனித்து வந்தார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தேவையான ஆயுதங்கள், பொருட்கள், நிதி ஆகியவற்றை இவர் பல நாடுகளுக்கு அனுப்பி வந்தார். ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இவரது கட்டுப்பாட்டில் இருந்து வந்தனர். இவருக்கு அமெரிக்கா கடந்த 2023-ம் ஆண்டே தடை விதித்திருந்தது.
ஈராக்கின் அல் அன்பர் பகுதியில் அபு காதிஜாவின் நடமாட்டம் இருப்பதாக ஈராக் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இத்தகவல் அங்குள்ள அமெரிக்க ராணுவத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அபு காதிஜா தீவிரமாக கண்காணிக்கப்பட்டார். அபு காதிஜா பற்றிய தகவல் உறுதி செய்யப்பட்டதும், அங்கு அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அபு காதிஜா மற்றும் அவருடன் இருந்த மற்றொரு ஐஎஸ்ஐஎஸ் தீவிராதியும் உயிரிழந்தனர். அவர்கள் தற்கொலைப் படையினர் அணியும் வெடி குண்டுகள் பொருத்தப்பட்ட உடையை அணிந்திருந்தனர். டிஎன்ஏ பரிசோதனைக்குப்பின் அபு காதிஜாவின் உயிரிழப்பை ஈராக் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
5 hours ago
7 hours ago
9 hours ago