Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 13 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
Community Spirit Index-ன் சமீபத்திய தரவரிசையில், இந்தியா உட்பட வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 53 நகரங்களுக்கு அங்கு வசிப்போர் எவ்வளவு நட்பு குணம் கொண்டவர்கள் மற்றும் நட்பு குணமற்றவர்கள் என்பதை அடிப்படையாக கொண்டு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
உலகின் சிறந்த நட்பு நகரங்களாக டொராண்டோ மற்றும் சிட்னி ஆகியவை பட்டியலில் முன்னிலையில் உள்ளன. டொராண்டோ மற்றும் சிட்னி ஆகிய இரண்டு நகரங்களும் கிட்டத்தட்ட 10-க்கு 7.97 என்ற அளவில் புள்ளிகளை பெற்றுள்ளன.
அதே நேரம் நம் இந்திய தலைநகரான புதுடெல்லி மற்றும் மும்பை ஆகிய 2 நகரங்கள் மிகவும் நட்பற்ற மக்கள் வசிக்கும் உலக நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த தரவரிசை பட்டியலை தயாரிக்க மொத்தம் 6 அளவீடுகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
உலகில் மிகவும் நட்புறவு கொண்ட டாப் 10 நகரங்கள்: டொராண்டோ, சிட்னி, எடின்பர்க், மான்செஸ்டர், நியூயார்க், மொண்ட்ரியால், மெல்போர்ன், சான் பிரான்சிஸ்கோ, டப்ளின், கோபன்ஹேகன் (Copenhagen).
உலகில் மிகவும் நட்புறவு இல்லாத டாப் 6 நகரங்கள்: கானா, மொராக்கோ, மும்பை, கோலாலம்பூர், ரியோ டி ஜெனிரோ, டெல்லி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
43 minute ago
43 minute ago