Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் விதிமுறைகளில் முறைகேடு செய்ததாகக் கூறி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.இ.அ.தி.மு.க) கட்சியைத் தடை செய்ய வேண்டும் என இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) சட்டசபை உறுப்பினர் சரவணன் மனு அளித்து உள்ளார்
கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் ஏ.கே .போஸ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த தி.மு.க வேட்பாளர் சரவணன் வழக்கு தொடர்ந்தார். அதில், “போஸ்க்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் படிவத்தில் பதிவு செய்யப்பட்ட ஜெயலலிதாவின் கைரேகை போலியாக உள்ளது. அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்” என கோரியிருந்தார். இந்த வழக்கு நடந்தபோது ஏ.கே. போஸ் மரணமடைந்தார்
வழக்கின் இறுதியில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “ஜெயலலிதாவின் கைரேகை மிகவும் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதால், அப்படிவத்தை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். வேட்புமனுவில் கைரேகை இடலாம் என சட்டத்தைத் திருத்தி கடிதம் வாயிலாக தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது சட்ட விரோதமானது. எனவே, ஏ.கே. போஸ் வெற்றி செல்லாது” எனத் தெரிவித்திருந்தது.
அந்தவகையில், ஜெயலலிதா கைரேகை வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், போலி கையெழுத்திட்ட படிவம் வழங்கிய அ.இ.அ.தி.மு.கவை தடை செய்ய வேண்டும். சட்டத்தைத் திருத்தி கடிதம் வாயிலாக ஒப்புதல் அளித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில்சரவணன் மனு அளித்து உள்ளார்.
9 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago