Editorial / 2019 ஜூலை 02 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து அதன் முக்கிய நிர்வாகி இசக்கி சுப்பையா விலகியுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் ஆறாம் திகதி தென்காசியில் நடைபெறவுள்ள விழாவில், 20ஆயிரம் ஆதரவாளர்களுடன் அ.தி.மு.கவில் இணைய உள்ளதாகவும் அவர் இன்று (02) அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலக உள்ளார் என்றும் அ.தி.மு.க.வில் இணைய உள்ளதாகவும் முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் விலக உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இசக்கி சுப்பையா, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் இருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக நேற்று அறிவித்துள்ளார்.
தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் இருந்து ஏற்கெனவே விலகிய நிலையில், தற்போது இசக்கி சுப்பையாவும் விலகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
20 minute ago
24 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
24 minute ago
50 minute ago