Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 டிசெம்பர் 12 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானில், அகதிகள் விவகாரத்துறை அமைச்சு அலுவலகத்தில், இன்று (12) காலை நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், அமைச்சர் கலில் ஹக்னி உயிரிழந்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அகதிகள் விவகாரத்துறை அமைச்சராக கலில் ஹக்னி.செயற்பட்டு வந்தார்.
இந்நிலையில், காபுலில் உள்ள அகதிகள் விவகாரத்துறை அமைச்சக அலுவலகத்தில், இன்று (12), அமைச்சர் கலில் ஹக்னி வழக்கமான பணிகளை செய்துகொண்டிருந்தார்.
அப்போது, அமைச்சின் அலுவலகத்திற்கு வந்த நபர் தன் உடம்பில் மறைத்து கொண்டுவந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார்.
அலுவலகத்தில் நடந்த இந்த தற்கொலைப்படை தாக்குதலில், அமைச்சர் கலில் ஹக்னி உயிரிழந்தார். மேலும், அலுவலக ஊழியர்கள் மேலும் 5 பேரும் உயிரிழந்தனர்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து அகதிகள் விவகாரத்துறை அமைச்சக அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
உயிரிழந்த அமைச்சர் கலில் ஹகின் ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் சிராஜுதினின் உறவினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 minute ago
30 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
30 minute ago
1 hours ago
2 hours ago