2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அணு ஆயுத தகவலை சீர்குலைக்கும் சீன கருவிகள்

Freelancer   / 2022 ஜூலை 30 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனத் தயாரிப்பான ஹூவாய் கருவிகள் அமெரிக்க அணு ஆயுதத் தகவல்தொடர்புகளை சீர்குலைக்கக்கூடும் என்று எஃப்.பி.ஐ விசாரணையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில், வொஷிங்டன் டிசியில் உள்ள தேசிய அர்போரேட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட சீன தோட்டத்தை உருவாக்க சீன அரசாங்கம் 100 மில்லியன் டொலர்களை செலவழிக்க முன்வந்தது.

கோயில்கள், காட்சிக் கூடங்கள் மற்றும் 70 அடி வெள்ளை கோபுரம் ஆகியவற்றை கொண்ட திட்டம் அதிகாரிகளை பரவசப்படுத்தியதுடன், பல்லாயிரம் சுற்றுலாப் பயணிகளையும் வருடாந்தம் இது ஈர்க்கும் என்றும் நம்பப்பட்டது.

எனினும் அமெரிக்க தலைநகரிலிருந்து 2 மைல் தூரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குறித்த வெள்ளைக் கோபுரம் உளவுத் தகவல் சேகரிப்புக்கு ஏற்ற இடம் என்று பல வட்டாரங்கள் சீஎன்என் செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளன.

அமெரிக்க சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள தூதரக சிறப்புரிமைக்கு அமைய அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட பொருட்களைக் கொண்டு கோபுரத்தைக் கட்ட சீன அதிகாரிகள் விரும்பியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2018இல் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்ட பாதுகாப்பு கரிசனைகளை முதலில் தெரிவித்திருந்தது. கட்டுமானப் பணிகள் நடைபெறுவதற்கு முன்னர் அதிகாரிகள் திட்டத்தை இரத்துச் செய்தனர்.

இரத்துசெய்யப்பட்ட சீன தோட்டமானது எஃப்.பி.ஐ  மற்றும் ஏனைய அமைப்புகளின் எதிர் புலனாய்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த தசாப்தத்தில் அமெரிக்க மண்ணில் சீன உளவுத்துறையின் வியத்தகு அதிகரிப்பு என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறுவதை இது பறைசாற்றுகிறது.

இந்நிலையில், மத்திய மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு அருகில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மேல் உள்ள சீனத் தயாரிப்பான ஹூவாய்க் கருவிகள் தொடர்பான எஃப்.பி.ஐ கண்டுபிடித்த மிகவும் ஆபத்தான விடயங்களில் ஒன்றாகும்.
 
ஹூவாய் கருவிகள், நாட்டின் அணு ஆயுதங்களை மேற்பார்வையிடும் அமெரிக்க மூலோபாயக் கட்டளையால் பயன்படுத்தப்பட்டவை உட்பட, மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்புத் துறை தகவல்தொடர்புகளை கைப்பற்றி சீர்குலைக்கும் திறன் கொண்டதாக எஃப்.பி.ஐ தீர்மானித்தது.

இந்த கோபுரங்களிலிருந்து ஏதேனும் தரவுகள் உண்மையில் இடைமறித்து பீஜிங்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டதா என்பதை உளவுத்துறை சமூகம் தீர்மானித்ததா என்பது தெளிவாக இல்லை.

எனினும், அமெரிக்காவை உளவு பார்க்கும் எந்த முயற்சியையும் சீன அரசாங்கம் கடுமையாக மறுக்கிறது. 

சீஎன்என்க்கு ஹூவாய் அளித்த அறிக்கையில், பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட எந்தவொரு தகவல் தொடர்பு அலைக்கற்றையிலும் அதன் உபகரணங்கள் செயல்படும் திறன் கொண்டவை என்பதை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .