2025 நவம்பர் 05, புதன்கிழமை

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியது ஈரான்

Editorial   / 2019 ஜூலை 07 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, யுரேனியத்தின் அளவை 5 சதவீதமாக அதிகரிக்கவுள்ளதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல், இன்று (07) வெளியிடப்படவுள்ளதாக, ஈரான் உயரதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஈரான் தமது அணுவாயுத உற்பத்திகளின் போது 3.67 வீத யுரேனியத்தையே பயன்படுத்தி வந்தது.

இந்நிலையில், யுரேனியத்தின் அளவை 5 சதவீதமாக அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

மேலும் 2015ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் ஈரானின் அணுவாயுத உற்பத்தி துறைசார் சிரேஷ்ட தலைவர் அப்பாஸ் அராக்கி குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு பிரித்தானியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜேர்மன், சீனா என சர்வதேச அளவில் அதிக சக்தி வாய்ந்த 6 நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் ஈரான் 2015 அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதற்கமைய ஈரான் தன்னுடைய அணுவாயுத ஆய்வைக் கைவிடுவதற்குப் பதிலீடாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டன.

எவ்வாறெனினும், ஈரான் ஒப்பந்தத்தை மீறி செயற்படுவதாகத் தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X