2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

“அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புங்கள்”

Mithuna   / 2024 ஜனவரி 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு ஐந்து நாட்கள் பயணமாக சீனாவுக்கு சென்றிருக்கிறார். இந்த பயணத்தின் போது, மாலத்தீவு மற்றும் சீனா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில் ஜனாதிபதி முய்சு சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “மாலத்தீவுக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகளை அனுப்ப சீனா முயற்சி எடுக்க வேண்டும். மாலத்தீவின் வளர்ச்சியில் மிக நெருங்கிய நட்பு நாடாக சீனா விளங்குகிறது.

"மாலத்தீவு வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு திட்டங்களை சீனா தொடங்கியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன் எங்களின் முதன்மை வணிக மையமாக சீனா இருந்தது. இதே நிலை மீண்டும் உருவாக வேண்டும் என விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X