2025 மே 14, புதன்கிழமை

அதிபயங்கர தாக்குதலுக்கு தயாராகிறது ஹமாஸ்

Freelancer   / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசா மீது தொடர்ந்து 17-வது நாளாக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது. காசாவிற்குள் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இஸ்ரேல் எல்லையில் வீரர்களை குவித்துள்ளது.

இந்நிலையில், சயனைடு கலந்த ரசாயன வெடிகுண்டுகளை வீச ஹமாஸ் ​அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜோக் உறுதிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இது அல்-கொய்தாவை அடிப்படையாக கொண்டது. 2003-ம் ஆண்டு அந்த பயங்கரவாத அமைப்பு மேற்கொண்ட திட்டத்துடன் தொடர்புடையது. நாங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா மற்றும் ஹமாஸ் அமைப்புகளை எதிர்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X