2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில்

Mithuna   / 2024 ஜனவரி 01 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபி அருகே முரேகாவில் 55 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்ட இந்து கோயில் கட்டப்படுகிறது. கடந்த 2018 பிப்ரவரியில் இக்கோயில் கட்டுமானப் பணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் சுமார் 1,200 இந்து கோயில்களை நிறுவி, பராமரித்து வரும் பாப்ஸ் (பிஏபிஎஸ்) அமைப்பு அபுதாபி கோயிலையும் கட்டி வருகிறது. இக்கோயிலில் கிருஷ்ணன், சிவன், ஐயப்பனின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இக்கோயில் 2024 பிப்ரவரி 14-ம் திகதி, பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. இக்கோயில் வளாகத்திற்காக ஐக்கிய அமீரக அரசு 17 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது. இதற்காக ஐக்கிய அமீரக அரசுக்கு பிரதமர் மோடி ஏற்கெனவே நன்றி தெரிவித்திருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் 35 லட்சம் இந்தியர்கள் இக்கோயில் திறக்கப்படும் தினத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X