Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 மே 14 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது அனுமதியின்றி தன்னைப் பெற்றெடுத்ததற்காக தனது பெற்றோருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாக செய்திகள் வளம்வருகிறது . அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நான் உண்மையில் இங்கு இருக்க விரும்புகிறேனா என்பதை நான் பிறக்கும் முன்பே அவர்கள் என்னைக் கேட்க முயற்சிக்கவில்லை" என கேலியாக சொல்லி இருக்கிறார்.
அமெரிக்காவில் புகழ் பெற்ற சமூக ஊடக பிரபலமாக இருக்கிறார் தியாஸ். Kass Theaz, TikToker தனது கணக்கை "நையாண்டி" என குறிப்பிட்டுள்ளார். இந்த வினோத குற்றச்சாட்டை பற்றி பேசி ஒரு வீடியோவையும் அவர் பதிவிட்டு இருக்கிறார். அதில், தனது விருப்பத்திற்கு எதிராக தன்னை பெற்ற பெற்றோருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தாலும், தனக்கு ஏன் குழந்தைகள் வேண்டும் என்பதற்கான காரணத்தையும் பேசி இருக்கிறார்.
இந்த வைரல் பிரபலம் இரண்டு பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர்கள் குறித்து பேசியபோது, அவர்களின் அனுமதியின்றி அவர்களை பெற்றதற்கு நான் பொறுப்பு இல்லை எனக் கூறினார். மேலும், "நீங்கள் இப்போது கர்ப்பமாக இருந்தால், ஒரு மனநல மருத்துவரை அணுகி, வயிற்றில் கருவாக இருக்கும் பிள்ளைகளுக்கு உண்மையில் இந்த உலகில் இருக்க விருப்பம் இருக்கிறதா ? என கேட்குமாறு கருவூற்று இருக்கும் தாய்மார்களுக்கு ஐடியாவையும் சொல்லி இருக்கிறார் தியாஸ்.
மேலும், தனது பெற்றோர்மீது வழக்கு தொடுத்தது குறித்து கூறிய தியாஸ், அவர்கள் என்னை கருத்தரித்து இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் பார்ட்னர்ஸ். என் அனுமதி இல்லாமல் என்னை பெற்றெடுத்து இருக்கிறார்கள் எண் பெற்றோர். அதனால்தான் நான் அவர்கள் மீது வழக்கு போட்டு இருக்கிறேன். மேலும், பிறந்து வளர்ந்து வேலைக்கு சென்று எண்ணை பார்த்துக்கொள்ள வேண்டும் என எனக்கு தெரியாது" என வேடிக்கையாக பேசி இருக்கிறார் தியாஸ்.
வேடிக்கையான வீடியோக்கள் பதிவிட்டு அதன்மூலம் பிரபலமடைந்தவர் தியாஸ். அந்த வகையில், அவர் பதிவிட்ட இந்த வீடியோவும் சிரிப்பதற்காகத்தான். ஆனாலும், நெட்டிசங்கள் பலர் அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். அதிலும், "உங்கள் அனுமதி இல்லாமல் பெற்றெடுத்துவிட்டார்களா.. அப்படியென்றால் செத்துவிடுங்கள்.. அனுமதி கேட்கும்போது மீண்டும் பிறப்பீர்கள்" போன்ற காமெண்டுகள் லைக்ஸ் அள்ளுகிறது.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago