2025 மே 03, சனிக்கிழமை

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் ட்ரம்ப்

Freelancer   / 2025 ஜனவரி 21 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக, டொனால்ட் ட்ரம்ப், திங்கட்கிழமை (20) பதவியேற்றார்.

நவம்பர் மாதமே தேர்தல் நடந்து முடிந்திருந்தாலும், அமெரிக்க அரசியலமைப்பின்படி ஒவ்வொரு ஜனாதிபதியின் பதவி காலமும் ஜனவரி 20ஆம் திகதியில்தான் தொடங்கும். அந்த வகையில் இலங்கை நேரப்படி திங்கட்கிழமை (20) இரவு 11 மணிக்கு அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இதற்காக, கார்கள் புடைசூழ வெள்ளை மாளிகைக்கு வந்தடைந்த ட்ரம்பை, ஜோ பைடன் கைகுலுக்கி வரவேற்றார். கடுமையான குளிர் காரணமாக வெள்ளை மாளிகையில் உள்ள கேபிட்டால் கட்டிடத்துக்கு உள்ளே ரோடுண்டா என்ற பகுதியில் நடைபெறும் என முன்பே தெரிவிக்கப்பட்டது. இது மிக பெரிய, வட்ட வடிவிலான அறையாகும்.

இதன்படி, கேபிட்டால் கட்டிடத்தின் உள்ளரங்கில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ட்ரம்ப் பதவியேற்பு விழாவானது, இசை நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. அமெரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், ட்ரம்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். 

இதே விழாவில், துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸும் பதவியேற்றார். 

கடுமையான வானிலையால், கடந்த 1985ஆம் ஆண்டு ரொனால்டு ரீகனும் இதேபோன்று மூடிய அறையில் பதவியேற்று கொண்டார்.

பதவியேற்பு விழாவில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர். 

ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். ட்ரம்புக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் குறித்து ட்ரம்ப் தனது முதல் உரையை ஆற்றினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X