2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் நாடுகள்

Freelancer   / 2025 ஏப்ரல் 07 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

50க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, ட்ரம்பின் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட கூர்மையான சரிவுகள், தனது வர்த்தக வரிகள் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

புளோரிடாவில் WEEKEND முடித்து வாஷிங்டனுக்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 

“சில நேரங்களில் எதையாவது சரிசெய்ய மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் வர்த்தக பங்காளிகள் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளனர்” என்றும் கூறினார்.

இதற்கிடையே தனது சொந்த சமூக ஊடகமாக ட்ரூத் சோசியலில், திங்கட்கிழமை (7) அவர் வெளியிட்ட பதிவில், 

“சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளுடன் நமக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உள்ளது.

“இந்தப் பிரச்சினையை தீர்க்க ஒரே வழி, வரி விதிப்புகள் மட்டுமே. இவை இப்போது அமெரிக்காவிற்கு பல பில்லியன் டாலர்களை கொண்டு வருகின்றன. அவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.

“மேலும், பார்ப்பதற்கு ஒரு அழகான விஷயம். தூங்கும் ஜனாதிபதி ஜோ பைடனின் காலத்தில் இந்த நாடுகளுடனான உபரி வளர்ந்துள்ளது. நாம் அதை மாற்றப் போகிறோம், விரைவில் மாற்றப் போகிறோம். அமெரிக்காவிற்கான வரி விதிப்புகள் மிகவும் அழகான விஷயம் என்பதை ஒரு நாள் மக்கள் உணர்வார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .