2025 நவம்பர் 05, புதன்கிழமை

‘அரசியல் பேச நடிகர் விஜய்க்கு உரிமை உள்ளது’

Editorial   / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் இந்திய நாட்டு குடிமகன் என்பதால் அவருக்கும் அரசியல் பேச உரிமை உள்ளது என இந்தியாவின் முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் காஞ்சிபுரத்தில் நேற்றுத்  தெரிவித்துள்ளார்.

கான்க்சிபுரத்தில் தொண்டை மண்டல ஆதி சபை துளுவ வேளாளர் சமுதாயக்கூடத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தலைப்பில் அரசமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்த மக்கள் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பாரதிய ஜனாக் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் சிவ. செந்தமிழரசு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னரே மேற்படி கருத்தை பொன். ராதாகிருஷ்ணன் வெளிப்படுத்தினார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “திரைப்பட நடிகர் விஜய் இந்தாட்டின் குடிமகன். அவர் அரசியல் கருத்துகளைக் கூறக்கூடாது என யாரும் கூற முடியாது. அரசியலில் உண்மையான கருத்துக்களை யார் சொன்னாலும் அதை வரவேற்போம். அப்படி உண்மையான கருத்துகளை அவர் சொல்லவில்லை என்றால் மனச்சாட்சி உறுத்தும். இது நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும்” என்று கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X