2025 மே 14, புதன்கிழமை

அரபு தலைவர்கள் உடனான ஜோ பைடன் சந்திப்பு ரத்து

Freelancer   / 2023 ஒக்டோபர் 18 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹமாஸ் அமைப்பு தாக்குதலுக்குப் பிறகு காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காசாவில் உள்ள மக்கள் ஏவுகணை தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் திங்கட்கிழமை (17) காசாவில் உள்ள மருத்துவமனை ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் தாக்கியதாக காசா மற்றும் பலஸ்தீன அதிகாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை (18) இஸ்ரேல் சென்று ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஜோ பைடன் ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர், பாலஸ்தீன தலைவர் ஆகியோரை சந்தித்து பேச இருந்தார்.

இதனால் காசா- இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.  ஆகவே, இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு ஜோ பைடன் அமெரிக்கா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X