2025 மே 15, வியாழக்கிழமை

அலைபேசி திருடனிடம் மனதை பறிகொடுத்த பெண்

Freelancer   / 2023 ஜூலை 26 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேசிலை சேர்ந்த   இளம் பெண்ணொருவர்  தனது அலை​பேசியுடன் வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது  இளைஞன் ஒருவர் அந்த அலைபேசியை பறித்து கொண்டு ஓடியுள்ளார்.

திருடிக்கொண்டு ஓடிய இளைஞன் என்ன வகையான அலைபேசியை திருடியுள்ளேன் என்பதை பார்க்க, அதனை இயக்கியுள்ளார். அதில் இளம் பெண்ணொருவரின் புகைப்படம் இருந்துள்ளது. அழகான பெண்ணிடம் திருடி தப்பு செய்துவிட்டோமே என்று வருந்தியுள்ளார்.

திரும்பி வந்த இளைஞன் அந்த பெண்ணிடம் மன்னிப்புகேட்டு  அலைபேசியை திருப்பி கொடுத்து உள்ளார். அதனால், அந்த இளம் பெண்ணுக்கு அந்த நபரை பிடித்து போய்விட்டது. அப்பெண்ணோ இளைஞனின் இதயத்தை திருடி விட்டார்.

கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வருகிறார்கள். இது குறித்து காதல் ஜோடி பேட்டி அளித்து உள்ளனர். இந்த வீடியோவை ஒரு பிரேசில் ஊடகவியலாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரேசிலில் மட்டுமே இப்படியெல்லாம் நடக்கும் என்று பதிவிட்டு உள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .