Freelancer / 2024 டிசெம்பர் 30 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில், அவசர உதவி எண்ணான 911க்கு தொடர்ந்து 17 முறை அழைத்து பொலிஸாரை தொந்தரவு செய்த 24 வயதான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன், அவசர உதவி எண்ணான 911க்கு முதலில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அருகில் இருக்கும் மளிகை கடைக்கு செல்வதற்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தாமல், பொலிஸாரின் வாகனத்தில் வந்து தன்னை இறக்கி விடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை கேட்டு ஆத்திரமடைந்த பொலிஸார், குறித்த இளைஞனின் இருப்பிடத்திற்கே சென்று அவரை எச்சரித்துள்ளனர். அத்துடன், அவசர உதவிக்கு மட்டும் தான் 911 எண்ணை தொடர்பு கொள்ளவேண்டும் என்று பொலிஸார் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதனையடுத்து 911 எண்ணுக்கு குறித்த இளைஞன், 17ஆவது முறையாக மீண்டும் அழைத்துள்ளார். பின்னர் அவசர உதவி எண்ணை தவறாக பயன்படுத்தியதாக கூறி குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.
6 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
06 Nov 2025