Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஜூலை 01 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை சுமார் இரு மடங்காக உயர்த்தியுள்ளது அவுஸ்திரேலியா. இந்தக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் வீட்டு வசதி துறையில் கடுமையான நெருக்கடி நிலை நீடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு காரணம் வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்கள் எனச் சொல்லப்படுகிறது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நகர்வை அவுஸ்திரேலியா முன்னெடுத்துள்ளது.
அதன்படி இதுநாள் வரையில் 710 அவுஸ்திரேலிய டொலர்களாக இருந்த சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணம் 1,600 அவுஸ்திரேலிய டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், பார்வையாளர் விசா, தற்காலிக பட்டதாரி விசா வைத்துள்ளவர்கள் ஆன்ஷோரில் மாணவர் விசா விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடைமுறைக்கு வரும் இந்த விசா மாற்றங்கள் சர்வதேச கல்வி முறையின் தரம், சிறந்த குடியேற்ற நகர்வுகளை அவுஸ்திரேலியாவுக்கு வழங்கும் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் கிளேர் ஓநீல் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் வெளியான குடியேற்றம் சார்ந்த தரவுகள் தான் இதற்கு காரணம் என தெரிகிறது.
அதேசமயம், வெளிநாட்டு மாணவர்கள் விசா நீட்டிப்பை தவிர்க்கும் வகையிலும் நகர்வுகளை அவுஸ்திரேலியா முன்னெடுத்துள்ளது. சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆஸி.யில் கல்வி பயில்வது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கடந்த 2022-2023 நிதியாண்டில் சுமார் 36.4 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாக இந்த துறை தனது மதிப்பாகக் கொண்டு இருந்தது.
இந்நிலையில், சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை அவுஸ்திரேலியா உயர்த்தியுள்ளது. அதனுடன் இந்த பிரிவில் போட்டியிடும் அமெரிக்கா மற்றும் கனடாவை காட்டிலும் இந்த கட்டணம் அதிகம். அங்கு முறையே 185 மற்றும் 110 டொலர்களாக விசா கட்டணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.S
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
2 hours ago