Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 மே 07 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கும்பாகிஸ்தானுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக ஐரோப்பாவிற்கும் செல்லும் விமானங்களை மாற்றுப்பாதையில் மாற்றியமைத்துள்ளது நிலையில், சிலவற்றை இரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாபாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் காஷ்மீரைத்தாக்கியது, அணு ஆயுத எதிரிகளுக்குஇடையே இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகநடந்த மோசமான சண்டையில் ஐந்து இந்திய போர் விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது.
இந்நிலையில், இந்த மோதல் காரணமாக, பல்வேறு ஆசிய விமான நிறுவனங்கள், தங்களின் ஐரோப்பா நோக்கி விமானங்களின் வழித்தடத்தை மாற்றியுள்ளதோடு, சிலவற்றை நேரடியாக இரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளன.
அந்தவகையில், தாய்வானைச் சேர்ந்த EVA Air நிறுவனம், பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தியா – பாகிஸ்தான் பகுதியில் உள்ள விமான வழிதடத்தை தவிர்க்கும் வகையில், ஐரோப்பா நோக்கிய விமானங்களை மாற்றியமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், வியன்னாவிலிருந்து புறப்பட்ட விமானம், மீண்டும் அந்நகரத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டதோடு, தாய்வான் – மிலான் விமானம் வியன்னாவை அடைந்த பின் எரிபொருள் நிரப்பிய பின்னர் பயணத்தை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
கொரியன்ஏர் தனது (சியோல்)இஞ்சியோன்-டுபாய் விமானங்களை, பாகிஸ்தான் வான்வெளி வழி பாதைக்குப் பதிலாக மியான்மர், பங்களாதேஷ் மற்றும் இந்தியா வழியாகச் செல்லும்தெற்குப் பாதையைத் தெரிவு செய்தது.,
புதன்கிழமை அதிகாலை முதல் ஐரோப்பா மற்றும் தெற்காசியாவில் உள்ள இடங்களுக்கான விமானங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்றும், இதனால் சில விமானங்கள்தாமதமாகலாம் என்றும் தாய்வான் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
சீனா ஏர்லைன்ஸ் தனது அவசரகாலத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாகவும்,"அதன் பயணிகள் மற்றும் பணியாளர்களின்பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும்" கூறியது.
மேலும் இன்று லண்டனுக்குச் செல்லவிருந்த விமானத்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்கு முன்பு, தாய்வானில் இருந்து ஐரோப்பா நோக்கிச்செல்லும் பல விமானங்கள் ரஷ்யாவைத்தாண்டி பறந்தன,
ஆனால் தற்போது இந்தியா,பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாமீது பறந்ததால் இப்போது தாய்வான் விமான நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago