Editorial / 2019 மே 14 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வான் வழியாக மலேஷியாவுக்கு அனுப்பப்பட, அகதிகள் முகாம்களிலிருந்து, பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட பதின்ம வயதுடைய 23 றோகிஞ்சா சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டுப் பொலிஸார் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, றோகிஞ்சா ஜோடி உட்பட ஆட்கடத்தல்காரர்கள் நால்வரைக் கைது செய்ய டாக்கா பொலிஸார், அவர்களிடமிருந்து 50க்கும் மேற்பட்ட பங்களாதேஷ் கடவுச்சீட்டுக்களை, கடந்த சனிக்கிழமை மீட்டுள்ளனர்.
டாக்காவின் வட பகுதியிலுள்ள வசிப்பிடமொன்றை தாங்கள் சோதனையிட்டதாகத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் மொக்லெசுர் ரஹ்மான், தையல் கடையொன்றுக்கு பின்னாலிருந்த அறையொன்றுக்குள் சிறுமிகளைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளார்.
மலேஷியாவில் வேலைவாய்ப்பு உறுதியளிக்கப்பட்டே, கொக்ஸ் பஸாரிலுள்ள அகதி முகாம்களிலிருந்து சிறுமிகள் கொண்டுவரப்பட்டதாக மொக்லெசுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 15வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட குறித்த சிறுமிகள், வலிந்த விபசாரத்தால் பாதிக்கப்பட்டவர்களாக மாறியிருக்கக்கூடும் என மொக்லெசுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
மியான்மார் இராணுவ நடவடிக்கையொன்றைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ஓகஸ்டில் அங்கிருந்து வெளியேறிய 740,000 றோகிஞ்சா முஸ்லிம்கள், ஏற்கெனவே அகதி முகாம்களில் இருக்கும் பிறிதொரு 300,000 பேருடன் பங்களாதேஷில் இணைந்திருந்தனர்.
26 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
4 hours ago