2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் பா.ஜ.க

Editorial   / 2019 ஜூலை 07 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகத்தில் நடக்கும் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில், பா.ஜ.க உள்ளது என்றும் “ஆபரேஷன் லோட்டஸ்” என்ற பெயரில், இந்த சதி அரங்கேறுகிறது என்றும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமய்யா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பத்து அதிருப்தி எம்.எல்.ஏக்களும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்களும் இராஜினாமா செய்தனர். இதனால், சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்த குமாரசாமி தலைமையிலான அரசாங்கம் கவிழும் நிலை உருவாகியுள்ளது.

அதிருப்தியாளர் எம்.எல்.ஏக்கள் கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை பெங்களூர் ராஜ்பவனில் சந்தித்து அரசாங்கத்துக்கு, தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். ஆயினும் இராஜினாமாக்களை சபாநாயகர் இன்னும் ஏற்காத நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பைக்கு சென்று அங்கு அவர்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த ஆட்சி கவிழ்ப்பு சதியின் பின்னணியில் பா.ஜ.கவே என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமய்யா குற்றம்சாட்டியுள்ளார். ஆட்சிக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நீடிக்கும் என்றும் கூறியுள்ளார்.a

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X