Editorial / 2025 டிசெம்பர் 14 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குழந்தை பிறப்பு சதவீதம் சரிந்து வருகிறது.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடந்த 1980-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றிருந்தால் சலுகைகள் மறுக்கப்பட்டது. அபராதமும் விதிக்கப்பட்டது.
அதன் பிறகு 2015-ம் ஆண்டு முதல் 2 குழந்தைகள் பெற்று கொள்ளலாம் என்று கொள்கை தளர்த்தப்பட்டது.
இதற்கிடையே சமீப ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் கடும் சரிவை சந்தித்தது. இதனால் 2021-ம் ஆண்டு 3 குழந்தைகளை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து குழந்தை பிறப்பை சீன அரசு ஊக்கு வித்தது.இதற்காக பல்வேறு சலுகைகள், உதவித் தொகை உள்ளிட்டவற்றை அரசு அறிவித்தது. ஆனாலும் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆண்டுதோறும் குழந்தை பிறப்பு விகிதம் சரிவு அதிகரித்தது. இதனால் சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சீனாவில் புதிய ஆணுறை வரி திட்டம் வருகிற ஜனவரி 1-ந் திகதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இந்த புதிய மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத் தின்படி, ஜனவரி 1-ந் திகதி முதல் கருத்தடை மருந்துகள் மற்றும் ஆணுறை போன்ற கருத்தடை சாதன தயாரிப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படாது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஆணுறை உள்ளிட்ட கருத்தடைச்சாதனங்கள் மீது சீனாவில் பெரும் பாலான பொருட்களுக்கு விதிக்கப்படும் 13 சதவீத மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படும்.இதற்கிடையே கருத்தடைச் சாதனங்களின் விலை உயர்வது என்பது மக்களை திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் அதிகரிப்புக்கு கொண்டு செல்லும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த வரி விதிப்பு குறித்து சீன சமூக ஊடகங்களில் கடும் விவாதங்கள் கிளம்பி உள்ளன. விலை உயர்த்தப்பட்டாலும் ஆணுறை வாங்குவதை விடக் குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவு அதிகமாகவே இருக்கும் என்று பலர் கிண்டல் செய்துள்ளனர். சீனாவில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகமானதால் 2023-ம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா சீனாவை முந்தியது என்பது குறிப்பிடத்தக்கது
6 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago