2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆதாரங்களை வெளியிட்டது இஸ்ரேல்: ஒலிப்பதிவு இணைப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 19 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் கடந்த 7ம் திகதி ஆரம்பித்து நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் பல பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில், காசாவில் உள்ள அல் – அஹ்லி அரபு மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் மிகப்பெரிய கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதல் உலகம் முழுவதும் இருக்கும் மக்களை உலுக்கி உள்ளது.

மருத்துவமனை மீதான தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 4 ஆயிரம் பேர் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.

மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு காரணம் இஸ்ரேல் என ஹமாஸ் அமைப்பு, தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்த நிலையில், மருத்துவமனை மீது யார் தாக்குதல் நடத்தியது என கேள்வி எழுந்தது. 

இந்நிலையில், பலஸ்தீனத்தின் காசாவில் உள்ள அல் – அஹ்லி அரபு மருத்துவமனை தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்புதான் காரணம் என்பதற்கான ஆதாரங்களை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் ராக்கெட் தாக்குதல் தொடர்பாக  ஹமாஸ் இயக்கத்தினர் இருவர் உரையாடிய ஆடியோ பதிவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

https://x.com/IDF/status/1714548529538953637?s=20

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X