2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச் சூடு

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் காபுலில் மேற்கொள்ளப்பட்டதுப்பாக்கித் தாக்குதலில் 32 பேர் பலியாகியுள்ள​​தோடு, 50இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு - அமெரிக்கா இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்படி அந்நாட்டில் இருந்த அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள துப்பாக்கித் தாக்குதல் மேற்கொண்டதில் 32 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ஷியா ஹசாரா பழங்குடி இனத்தின் தலைவரான அப்துல் அலிமசாரி நினைவாக காபூலில் நேற்று(06) நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது 2 பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்ட இரு பயங்கரவாதிகளையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X