2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பெயரிட காரணம் என்ன

Editorial   / 2025 மே 13 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத நிலைகளை இந்தியா தாக்கி அழித்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத நிலைகளை இந்தியா தாக்கி அழித்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காஷ்மீரில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக எடுத்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரை பயன்படுத்தி படம் தயாரிக்கும் வகையில், பாலிவுட் திரையுலகில் பெயர் உரிமம் வாங்குவதற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த பெயரை பதிவு செய்வதற்காக விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாம். இரண்டு நாட்களில் மட்டும் 30 க்கும் மேற்பட்ட பட தயாரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

சிந்தூர் என்ற பெயருக்கு 'திலகம்' எனப் பொருள். அதாவது அதாவது இந்து கலாச் சாரத்தில் திருமணமான பெண்கள் குங்குமம் போன்ற திலகங்களை சூடுவர். பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இந்துக்களை குறிவைத்து குறிப்பாக இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களின் திலகங்களை அழிக்கும் விதமாக அவர்களின் கணவர்களை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X