2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

ஆயத்த ஆடை ஆலையில் தீ: வங்கதேசத்தில் 16 பேர் உயிரிழப்பு

Editorial   / 2025 ஒக்டோபர் 15 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்கதேச தலைநகர் டாக்காவில் ஆயத்த ஆடை ஆலை மற்றும் ரசாயன கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இது குறித்து தீயணைப்புப் படை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

ஆயத்த ஆடை ஆலைக்கு அருகில் உள்ள ரசாயன கிடங்கில் கடுமையான தீ விபத்து ஏற்பட்டது. அது அந்த ஆலைக்கும் பரவியது. தேடுதல் பணிகளின்போது ஆலையின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் இருந்து 16 உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்த அனைவரும் நச்சு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ஆலையில் இன்னும் சிக்கியிருக்கக்கூடியவர்களை தேடும் பணி நடைபெற்றுவருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

வங்கதேசத்தில் தொழிற்சாலை விபத்துகள் காரணமாக பேரழிவுகள் ஏற்படுவது தொடர் நிகழ்வாக உள்ளது. டாக்கா அருகே ஆயத்த ஆடை ஆலையில் 2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது அதற்கு ஓர் எடுத்துக்காட்டு

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X