2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சிக்கு அனுமதி

Ilango Bharathy   / 2022 நவம்பர் 22 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 அமெரிக்காவில் ஆய்வகத்தில் வைத்துத் தயாரிக்கப்பட்ட இறைச்சியினை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 கோழியில் இருந்து எடுக்கப்பட்ட செல்கள் மூலம் இவ் வகை இறைச்சிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அந்தவகையில் இப்போது வரை ஆய்வகத்தில் வைத்துத் தயாரிக்கப்பட்ட இறைச்சியின் விற்பனை மற்றும் நுகர்வுக்கு சிங்கப்பூரில் மாத்திரமே  அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்பட்டியலில் தற்போது அமெரிக்காவும் இணைந்துள்ளது.

அந்தவகையில்  அமெரிக்கா, விரைவில் ஆய்வகத்தால் வளர்க்கப்படும் இறைச்சிக்கான முக்கிய சந்தையாக மாறும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் நடந்த COP 27 உச்சிமாநாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவு தயாரிப்பது பற்றி விவாதிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .