2024 மே 11, சனிக்கிழமை

ஆர்ப்பாட்டக்காரர்களை கார் மோதியதில் தாய் பலி

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 15 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் மினியோஸ்டாவின் மினியாபொலிஸில், ஆர்ப்பாட்டமொன்றில் தனது கார் இன்னொரு வாகனத்தால் மோதப்பட்ட நிலையில் பெண்ணொருவர் மரணித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்காக வீதியொன்றை தனது காரால் முடக்கியவாறு குறித்த பெண் காணப்பட்ட நிலையிலேயே, அவரது காரை இன்னொரு வாகனம் மோதியுள்ளது.

சம்பவ இடத்திலேயே சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது நோக்கம் தெளிவில்லாமலுள்ளது.

குறித்த பெண் தவிர வேறொருவர் காயமடைந்துள்ளார்.

இந்நிலையில், கறுப்பினத்தவர் கொல்லப்பட்டதற்கு மேலதிக ஆதாரத்தைக் கோரியே செயற்பாட்டாளர்களால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .