2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாகி 13 பேர் இறந்த நிலையில் பக்தாத்தில் ஊரடங்கு

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலையில்லாமை மற்றும் மோசடி தொடர்பிலான இரண்டு நாட்கள் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாகி குறைந்தது 13 பேர் இறந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில், ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் காலவரையற்ற ஊரடங்குபிறப்பிக்கப்பட்டுள்ளது.

பக்தாத்தில் நேற்று முன்தினம் வெடித்த ஆர்ப்பாட்டங்களானவை தென் ஈராக்கிலுள்ள ஏனைய நகரங்களுக்கு பரவிய நிலையில் ஈராக்கியப் பிரதமர் அடெல் அப்துல் மஹ்டியின் ஓராண்டு கால அரசாங்கத்துக்கு சவாலொன்றாகக் கருதப்படுகிறது.

தென் ஈராக்கிய நகரமான நஸ்ரியாவே இதுவரையில் மோசமான ஆர்ப்பாட்டங்களைச் சந்தித்துள்ள நிலையில், அங்கு நேற்றிரவு இடம்பெற்ற மோதல்களில் மேலும் இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் இறந்த நிலையிலேயே உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று 13ஆக அதிகரித்திருந்தது.

முன்னதாக நஸ்ரியாவில் ஆறு ஆர்ப்பாட்டக்காரர்களும், பொலிஸ் அதிகாரியொருவரும் முன்னதாக நேற்று  சுட்டுக் கொல்லப்பட்டதாக மாகாண சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, தேசிய அளவிலான ஆர்ப்பாட்டங்களில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், தென் ஈராக்கிய நகரமான குட்டில் உள்ளூர் அரச அலுவலகமொன்றுக்குள் நுழைய முயன்றதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவர் நேற்றிரவு கொல்லப்பட்டதாக வைத்திய அதிகாரிகளும், பாதுகாப்புத் தகவல்மூலங்களும் தெரிவித்துள்ளன.

அந்தவகையிலேயே, தென் ஈராக்கிய நகரமான பஸ்ராவில் வேலைகளைக் கோரியும் மற்றும் அரச மோசடியை முடிவுக்கு கொண்டுவருமாறும் கடந்தாண்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களையடுத்த மிகப் பெரிய பிரபலமான ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இலங்கை நேரப்படி இன்று காலை 7.30 மணி முதல் பக்தாத்தில் நகர்வுகளின் மீதான தடைக்கு பிரதமர் அடெல் அப்துல் மஹ்டி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, அவர்களது மாகாணங்களில் ஊரடங்கைப் பிரகடனப்படுத்துவது மாகாண ஆளுநர்களைப் பொறுத்தது என பிரதமர் அடெல் அப்துல் மஹ்டி மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X