2025 மே 14, புதன்கிழமை

இடைவிடாத தாக்குதல் ; ஐ.நா வேதனை

Freelancer   / 2023 நவம்பர் 06 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. காசாவில் இஸ்ரேலியப் படைகள் இடைவிடாது தாக்குதல் நடத்துவதால் அங்கு மீண்டும் தொலைத்தொட்ர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒரே மாதத்தில் 3வது முறையாக இவ்வாறு தொலைத்தொடர்பு அங்கு முடக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (05) காசாவில் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி செய்தியாளர்களை சந்தித்தபோது, "காசாவில் வடக்கு, தெற்கு எல்லாம் இப்போது இல்லை. மொத்த காசாவும் இரண்டாகப் பிரிந்துள்ளது. நாங்கள் காசாவை சூழ்ந்துவிட்டோம். இன்னும் 48 மணி நேரம் தான் காசா நகருக்குள் இஸ்ரேலியப் படைகள் நுழைந்துவிடும்" என்று எச்சரித்துள்ளார்.

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 88 ஐ.நா. ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. திங்கள் கிழமை (06) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் UNRWA என்ற பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமையைச் சேர்ந்தவர்களாவர். ஒரே போரில் இத்தனை ஐ.நா. ஊழியர்கள் உயிரிழிந்திருப்பது வேதனை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைய சூழலில் மனிதாபிமான அடிப்படையில் காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X