Editorial / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்லாமிய ஆயுததாரிகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் வடமேற்கு சிரியா மீதான தாக்குதல் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டத்திலிருந்து இட்லிப்பில் முதலாவது தரைவழி முன்னேற்றமாக இட்லிப்பின் முனையிலுள்ள அல்-ஹபீட் நகரத்தை சிரிய அரசாங்கப் படைகள் கைப்பற்றியதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
ஏறத்தாழ 3,000,000 பொதுமக்கள் இருக்கும் வடமேற்கு சிரியாவானது இவ்வாண்டு ஏப்ரல் மாத இறுதியிலிருந்து ஏறத்தாழ தினமும் சிரிய, ரஷ்யா குண்டுவீச்சுக்கு இலக்காகு வருகின்றது.
இந்நிலையில், கடந்த வாரயிறுதியில் இட்லிப், ஹமா மாகாணங்களில் கடந்த வாரயிறுதியில் இடம்பெற்ற மோதல்களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது.
2015ஆம் ஆண்டு முதல் சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டின் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்துள்ள இட்லிப் பகுதி, சிரிய அரசாங்கத்தினதும், அதன் நட்புறவுநாடுகளுக்குமெதிரான எதிரணியின் இறுதியிடமான விளங்குகின்றது.
8 minute ago
15 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
25 minute ago
32 minute ago