2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இந்திய இராணுவத்துக்கு மாலத்தீவு காலக்கெடு

Mithuna   / 2024 ஜனவரி 16 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய இராணுவ வீரர்களை மார்ச் 15க்குள் திருப்ப பெற்றுக்கொள்ளுமாறு அந்நாட்டு ஜனாதிபதி முகம்மது மொய்சு தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே இராஜாங்க ரீதியிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மாலத்தீவு அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு மாலத்தீவில் நடந்த தேர்தலில் மக்கள் தேசிய காங்கிரஸ் தலைவர் முகமது முய்சு புதிய ஜனாதிபதித் தேர்வு செய்யப்பட்டார். சீன ஆதரவாளரான அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. நவம்பர் மாதம் அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "செப்டம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், இந்தியாவிடம் வலுவான கோரிக்கை வைக்க மக்கள் எனக்கு ஆணை பிறப்பித்துள்ளனர். மாலத்தீவு மக்களின் ஜனநாயக விருப்பத்துக்கு இந்தியா மதிப்பளிக்கும் என்று நம்புகிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே கடந்த 8ம் திகதி அவர் சீனாவுக்கு சென்றார். அப்போது மாலத்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்கு சீனா ஒத்துழைக்கும் என்பது உள்பட இரு நாடுகளுக்கும் இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தப் பயணத்தினைத் தொடர்ந்து ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனை ஜனாதிபதி மாளிகையில் உள்ள மூத்த அதிகாரி அப்துல்லா நஜிம் உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், "இந்திய இராணுவ வீரர்கள் இனி மாலத்தீவில் தங்கியிருக்க முடியாது. இது ஜனாதிபதி முகமது முய்சு மற்றும் இந்த அரசாங்கத்தின் கொள்கையாகும்" என்று தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X