2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இந்தியர்களுக்கு சீனா அழைப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 30 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

திபெத்தில் உள்ள புத்த மத மற்றும் இந்து மத புனித தலங்களை பார்வையிட இந்திய யாத்தீரிகர்கள் வரலாம் என, சீன வெளியுறவுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனா தொற்று பரவியதாலும், எல்லையில் நடந்த மோதல் காரணமாகவும் இந்தியா - சீனா இடையே உறவுகள் பாதித்ததாலும் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்திய யாத்தீரிகள் சீன எல்லையை கடந்து திபெத்தில் உள்ள கைலாஷ் மலை மற்றும் மானசரோவர் ஏரி போன்ற புனித தலங்களுக்கு செல்ல முடியாமல் இருந்தது.

 

இந்நிலையில் கடந்தாண்டு  டிசெம்பர் மாதம் இருதரப்பினர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 6 அம்ச ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் இந்திய யாத்ரீகர்கள் மீண்டும் திபெத் வருவதை ஊக்குவிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.

இதைதொடர்ந்து, திபெத்தில் உள்ள கைலாஷ் மலை, மானசரோவர் ஏரி ஆகியவற்றை பார்வையிட இந்திய யாத்ரீகர்கள் வரலாம் எனவும், இதற்காக இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக இருப்பதாகவும், சீன வெளிறவுத்துறை செய்தி தொடர்பாளர், செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .