2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இந்தியா இல்லாமல் இருப்பது அபத்தம்: எலான் மஸ்க்

Editorial   / 2024 ஜனவரி 24 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லை என்பது அபத்தமானது என்று உலகின் மிகப் பெரிய பணக்காரரும் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒரு கட்டத்தில் ஐநா அமைப்புகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். பிரச்சினை என்னவென்றால், அதிகப்படியான அதிகாரம் உள்ளவர்கள் அதை விட்டுவிட விரும்பவில்லை. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும், ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லை என்பது அபத்தமானது. ஆப்ரிக்காவுக்கும் கூட்டாக நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X