2025 நவம்பர் 05, புதன்கிழமை

இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்காக ஜெய்ஸ் - இ- முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை பாகிஸ்தான் அரசாங்கம் ரகசியமாக சிறையிலிருந்து விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டதில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே மிகவும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 

இந்நிலையில், இதற்கு பழிவாங்கும் நோக்கில், இந்தியா மீது தீவிரவாதிகள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், தாக்குதல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, பயங்கரவாதி மசூத் அசார் களமிறக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக, பாகிஸ்தான் சிறையில் உள்ள மசூத் அசாரை, அந்நாட்டு அரசாங்கம் ரகசியமாக விடுவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

பாகிஸ்தானின் செயலை தொடர்ந்து இந்திய எல்லைப்பகுதி பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான் மற்றும் காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

- இந்திய ஊடகங்கள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X