Editorial / 2019 ஜூலை 14 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் கீழ், இந்தியா மீதும் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக, அமெரிக்க வர்த்தக துணைப் பிரதிநிதி ஜெப்ரி கெர்ரிஷ் கூறியிருப்பதால், இந்தியா மீதும் ஐக்கிய அமெரிக்கா வர்த்தகப் போரைத் தொடங்கவுள்ளதாகத் தெரியவருகின்றது.
அண்மையில், இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்த்தை, அமெரிக்கா இரத்துச் செய்தது. பதிலுக்கு ஐக்கிய அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் மீது இந்தியா கூடுதல் வரி விதிப்பு என உரசல் எழுந்து, தற்போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்திய சந்தையை சமமாகவும் நியாயமாகவும் அணுக அனுமதிக்க வேண்டும் என, அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அறிவுசார் சொத்துரிமைகள், காப்புரிமைகள் தொடர்பாக சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
மேலும், இந்தியாவில் செயற்படும் அமெரிக்க பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் இந்தியாவிலேயே, தரவுகளைச் சேமித்து பராமரிக்க வேண்டும் என்றக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று, அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு எட்டப்படாவிட்டால், இந்தியா மீதும் விசாரணை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என, அமெரிக்க வர்த்தக துணை பிரதிநிதி ஜெப்ரி கெர்ரிஷ் கூறியுள்ளார்.
அமெரிக்க வர்த்தக சட்டத்தின் 301 ஆவது பிரிவின் கீழ், விசாரணை நடத்திய பிறகே, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தகப்போர் மூண்டது குறிப்பிடத்தக்கது.
12 minute ago
19 minute ago
23 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
23 minute ago
49 minute ago