2025 நவம்பர் 05, புதன்கிழமை

'இந்தியாவுக்கு எதிராக முதலில் அணுஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிராக முதலில் அணுஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார். 

பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடந்த சீக்கியர்கள் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்றார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தாங்கள் யார் மீதும் போரை ஆரம்பிக்க மாட்டோம் என்றும், பாகிஸ்தான் முதலாவதாக அணு ஆயுதங்களை ஒரு போதும் பயன்படுத்தாது என்றும் கூறினார். 

மேலும், பிரச்சினைக்கு போர் எப்போதும் ஒரு தீர்வாக அமையாது என்பதை இந்தியாவுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X