2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்தோனேசியாவில் பயங்கரம்;162 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 நவம்பர் 22 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்றைய தினம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது.

சியாஞ்சுர் நகரில், பூமிக்கடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நேரிட்ட இந்த நிலநடுக்கம், ரிச்டர் அளவில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது.

 இந்நிலநடுக்கத்தால், 4 பாடசாலைகள் மற்றும் 52 குடியிருப்புகள் பலத்த சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி சுமார் 700 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே சமயம் இன்றைய தினம் சாலமன் தீவுகளில் 7.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .