2026 ஜனவரி 06, செவ்வாய்க்கிழமை

இன்று இரவு தோன்றும் இராட்சத நிலவு

Freelancer   / 2026 ஜனவரி 03 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டின் முதல் 'சூப்பர் மூன்' நிகழ்வு இன்று இரவு வானில் தெரியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கண்டு ரசிக்கலாம்.

நிலவானது பூமிக்கு மிக அருகில் வரும்போது ஏற்படும் இந்த நிகழ்வின் போது, முழு நிலவு வழக்கத்தை விட பெரியதாகவும், சுமார் மூன்று மடங்கு கூடுதல் பிரகாசத்துடனும் காட்சியளிக்கும்.

2026ஆம் ஆண்டில் நாம் 3 'சூப்பர் மூன்'களைக் காணப்போகிறோம். அதன் முதல் நிகழ்வு இன்று நிகழ்கிறது.

இதற்கு 'ஓநாய் நிலவு' (Wolf Moon) என்று பெயர். நிலவு வழக்கத்தை விட 14% பெரியதாகவும், 30% அதிக பிரகாசமாகவும் தெரியும்.

சூரியன் மறைந்ததும் அடிவானத்தில் பொன்னிறமாக எழும் இந்த நிலவை அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் உள்ளதுR


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .