2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இன்ஸ்டகிராம் பயன்படுத்த இலண்டனில் புதிய கட்டுப்பாடு

Freelancer   / 2025 ஏப்ரல் 10 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டனில், இன்ஸ்டகிராம் பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

அதன்படி பெற்றோர்கள் தங்களின் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகளை நேரடியாக மேற்பார்வையிட கூடுதல் வசதிகளை அளித்துள்ளது. இதன்மூலம் பெற்றோர் அனுமதி இல்லாமல் சிறுவர்கள் இன்ஸ்டாகிராமில் நேரலையில் தோன்றுதல், நிர்வாண படங்கள் பரிமாறுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

பெற்றோர்கள் தங்களுடைய கணக்குகளுடன் குழந்தைகளின் கணக்குகனை இணைந்து இதனை செயல்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இதன் முதற்கட்டமாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்த கட்டுப்பாடு அமுலுக்கு வருகிறது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X