2024 மே 15, புதன்கிழமை

இம்ரான்கானின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

Mithuna   / 2023 டிசெம்பர் 31 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் பெப்ரவரி 8-ம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் வேட்புமனு தாக்கல் செய்திருந்திருந்தனர்.

பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளான லாகூர் மற்றும் மியான்வாலி ஆகிய 2 தொகுதிகளில் இம்ரான்கான் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இம்ரான்கானின் வேட்பு மனுக்களை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (30) நிராகரித்துள்ளது.

லாகூரில் இருந்து நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது, ஏனெனில் அவர் அந்தத் தொகுதியில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் அல்ல என்பதாலும், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் எனவும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2018 முதல் 2022 வரை பதவியில் இருக்கும்போது அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .