Freelancer / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
நோர்வே அரசியல் கட்சியான பார்டியட் சென்ட்ரமின் சட்டத்தரணிகள் பிரிவு இந்த பரிந்துரையை வழங்கி இருக்கிறது.
இது தொடர்பாக அந்த கட்சி தனது எக்ஸ் தளத்தில்,
“பாகிஸ்தானில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு முன்னாள் பிரதமர் இம்ரான்கான் செய்த பணிகளுக்காக, அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைத்து இருக்கிறோம்' என கூறியுள்ளது.
நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பதவியை இழந்த இம்ரான்கான் ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
முன்னதாக தெற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்த இம்ரான்கான் மேற்கொண்ட பணிகளுக்காக கடந்த 2019ஆம் ஆண்டும் அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025