2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இம்ரான்கானை விடுவிக்க கோரி பேரணி: வெடித்தது கலவரம்

Freelancer   / 2024 நவம்பர் 26 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை (வயது 72) விடுதலை செய்யுமாறு, இம்ரான்கானின் ஆதரவாளர்கள்  வலியுறுத்தி வருகின்றனர். 

அதன் ஒருபகுதியாக, தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்த இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டன. மேலும், பாதுகாப்பு கருதி இராணுவ வீரர்கள், பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. அதேபோல், பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அலைபேசி மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டன.

ஆனால், இதனை பொருட்படுத்தாமல் இம்ரான்கான் ஆதரவாளர்கள்  ஆயிரக்கணக்கானோர், இன்று (26), காலை இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாக சென்றனர். 

பஞ்சாப் மாகாணத்தில் நுழைந்தபோது பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதன்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். 

இந்த போராட்டத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  குறைந்தது 119 பேர் காயமடைந்தனர் மற்றும் இஸ்லாமாபாத்திற்கு வெளியேயும் பஞ்சாப் மாகாணத்தின் பிற இடங்களிலும் நடந்த மோதல்களில் 22 பொலிஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன என்று, மாகாண பொலிஸ் தலைவர் உஸ்மான் அன்வர் கூறினார்.  

மேலும் போராட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 4,000 பேரை பொலிஸார் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X